Published : 22 Sep 2021 03:07 AM
Last Updated : 22 Sep 2021 03:07 AM

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு :

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறவுள்ளது. மாவட்ட ஊராட்சியில் 12 வார்டுகள், 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 122 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அமைச்சர் கீதா ஜீவன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

இதுகுறித்து ஆவுடையப்பன் கூறும்போது, “திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் 89 வார்டுகளில் காங்கிரசுக்கு 9 வார்டுகளும், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. 76 வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது.

திருநெல்வேலி, அம்பா சமுத்திரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ராதாபுரம் தொகுதியில் அமைச்சர் கீதாஜீவன், நாங்குநேரி தொகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தேர்தல் பணியாற்றுவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x