Published : 21 Sep 2021 03:21 AM
Last Updated : 21 Sep 2021 03:21 AM
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இந்த பணியில், ஊராட்சி மன்ற தீர்மானத்தின் பரிந்துரை பட்டியல் புறக்கணிக்கப்படுவதாக கூறி ஆட்சியரிடம் முறையிடுவதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று சென்றனர். அப்போது, 10 பேருக்கு மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சித் மன்ற தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், காவல்துறையினரின் தடையை மீறி நுழைந்து, முதல் தளத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக அறையை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், ஆட்சியர் பா.முருகேஷை சுமார் 15 ஊராட்சி மன்ற தலை வர்கள் சந்தித்தனர். அவர்களில் பலர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.
ஆட்சியர் கண்டிப்பு
இதைத்தொடர்ந்து ஆட்சியர் பா.முருகேஷிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறும்போது, “பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே தயார் நிலையில் உள்ள பட்டியலை, அப்படியே தீர்மானமாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கட்டாயப் படுத்துகின்றனர். ஊராட்சி மன்றம் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப் பும் பரிந்துரை பட்டியலை ஏற்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியை ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலமாக தேர்வு செய்ய வேண்டும். ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் ஊராட்சி செயலாளர்களின் தலையீடு இருக்கக் கூடாது. தெருவிளக்கு பழுது, குடிநீர் குழாய் சேதம் உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஊராட்சி செயலாளர்கள் முன்வரவில்லை. ஆரணி ஒன்றி யத்தில் பம்ப் ஆபரேட்டர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு அங்கீ காரம் இல்லாத நிலை உள்ளது” என்றனர்.
ஒப்பந்த பணி கிடையாது
நேர்மையான பட்டியல்
பின்னர் ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, “பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் ஒருவர் வீடு கட்டிக் கொள்ள ரூ.2.70 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. அந்த நிதியுடன் ரூ.3 லட்சம் முதல் கூடுதலாக சேர்த்து வீடு கட்டிக் கொள்பவர்களை பயனாளிகளாக ஏற்க முடியாது. ரூ.3 லட்சம் செலவு செய்யும் அளவுக்கு வசதி உள்ளவர்களுக்கு ஏன்? வீடு வழங்க வேண்டும். உண்மையாக வறுமையில், ஏழ்மை நிலையில் உள்ளவருக்கு வீடு வழங்கப்படும். உங்களது தேர்வு நேர்மையாக இருக்க வேண்டும். தவறு செய்யும் ஊராட்சி செயலாளர்கள் மீது எழுத்துப் பூர்வமாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக் கப்படும்” என்றார்.இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் புறப்பட்டு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT