Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

மத்திய மண்டல மாவட்டங்களில் - 3,01,144 பேருக்கு கரோனா தடுப்பூசி :

திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிடும் மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. உடன், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா முகாம்களில் 3,01,144 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஊரகப் பகுதிகளில் 38,471 பேருக்கும், அரசு மருத்துவ மனைகளில் 795 பேருக்கும், திருச்சி மாநகராட்சி பகுதியில் 21,364 பேருக் கும் என மொத்தம் 60,630 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அப் போது, மாவட்டத்தில் மொத்தம் 383 இடங்களில் தடுப்பூசி முகாம் நடை பெறுகிறது என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 738 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி மெகா சிறப்பு முகாமில் 46,304 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 189 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 20,742 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருமயம் வட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு வருவாய் கிராமத்துக்கு ஒருவர் வீதம் என 5 வருவாய் கிராமங்களில் இருந்து குலுக்கல் முறையில் 5 பேருக்கு தலா 1கிராம் வீதம் தங்க நாணயம் வழங்குவதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 624 முகாம்களில் 1,00,036 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற முகாம்களை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பார்வையிட்டார்.

கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் நடந்த கரோனா தடுப்பூசி முகாம்களை ஆட்சியர் த.பிரபுசங்கர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது கடவூர், வேப்பங்குடி ஊராட்சிகளில் வீடு, வீடாக நேரில் சென்று பொது மக்களை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் 200 இடங் களில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 15,400 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப் பட்டன.

அரியலூரில் உள்ள பழைய நக ராட்சி அலுவலகம், புதிய நகராட்சி அலுவலகம், ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி, ஆர்.சி.தெரசா தொடக்கப்பள்ளிகளில் நடைபெற்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் களுக்கு 6 வகையான மளிகைப் பொருட்களும், கூப்பனும் வழங்கப்பட்டன. முகாம் நிறைவில் நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசாக பிரிட்ஜ் ஒரு நபருக்கும், 2-ம் பரிசாக வாஷிங்மிஷின் ஒருவருக்கும், 3-ம் பரிசாக இன்டெக்சன் ஸ்டவ் 3 பேருக்கும், 4-வது பரிசாக செல்போன் 4 பேருக்கும் வழங்கப்பட்டன.

இதேபோல, ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குலுக்கலில் முதல் பரிசாக ஒருவருக்கு மிக்ஸி, 2-ம் பரிசாக ஒருவருக்கு பட்டுப்புடவை, 3-ம் பரிசாக 10 பேருக்கு செல்போன்கள், 4-ம் பரிசாக 15 பேருக்கு புடவைகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் 189 இடங்களில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 12,727 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வால் பொதுமக்கள் பலர் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். ஆனால், டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கே இம்முறை தடுப்பூசி எனக் கூறி, டோக்கன் பெறாமல் வந்தவர்களிடம் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு அடுத்த முறை சிறப்பு முகாமில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சொல்லி சுகாதாரத் துறை ஊழியர்கள் அவர்களை திருப்பி அனுப்பினர்.

நாகை மாவட்டத்தில் 129 இடங் களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் 18,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 213 இடங்களில் நேற்று நடைபெற்ற முகாம்கள் மூலம் 27,305 பேருக்கு கரோனா தடுப்பூசி செலத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x