Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM
வில்லிபுத்தூர் நகைக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையில் மேலாளராகப் பணியாற்றி வருபவர் முருகன் (48). கடந்த 11-ம் தேதி மாலை அக்கடைக்கு வந்த ஆண், பெண் ஆகிய இருவர் மூக்குத்தி வாங்க வந்துள்ளதாகக் கூறினர். அப்போது மூக்குத்திகளை எடுத்து காட்டிவிட்டு திருப்பி வைத்தபோது 12 மூக்குத்திகள் மாயமானது தெரிய வந்தது.
அதையடுத்து, வில்லிபுத்தூர் பஸ் நிலையத்துக்குச் சென்று ஊழியர்கள் தேடியபோது அவர்கள் சிக்கினர்.
விசாரணையில் அவர்கள் நல்ல குற்றாலபுரம் தெருவைச் சேர்ந்த கணவன், மனைவி சீனிவாசன் - தாமரைக்கனி என்பது தெரிய வந்தது. மேலும், திருட்டுபோன மூக்குத்திகளும் மீட்கப்பட்டன. அவர்களை வில்லிபுத்தூர் நகர் போலீஸார் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT