Published : 14 Sep 2021 03:15 AM
Last Updated : 14 Sep 2021 03:15 AM

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - 8 தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் : ஆட்சியர்கள் அமர் குஷ்வாஹா, பாஸ்கர பாண்டியன் ஆகியோர் வெளியிட்டனர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை நேற்று வெளியிட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா. அருகில், சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை உள்ளிட்டோர். அடுத்த படம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று வெளியிட்டார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள்.

திருப்பத்தூர்/ராணிப்பேட்டை

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 8 தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர்கள் அமர் குஷ்வாஹா, பாஸ்கர பாண்டியன் ஆகியோர் வெளியிட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதி களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக் கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தின் எண்ணிக்கை 1,030-ல் இருந்து அதிகரித்து தற் போது 1,038-ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் களில் ஏதேனும் மாற்றங்கள் வேண்டுமென்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை வரும் 20-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.

கருத்து ஏதும் வரப்பெறாத நிலையில், தற்போது வெளியிடப் பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியலே இறுதியானது என முடிவு செய்யப்படும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சி யினர் பார்வைக்காக வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறஉள்ளது. இதற்காக, வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினர் முன் னிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று வெளியிட்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச் சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 1,122 முதன்மை வாக்குச் சாவடிகளில் பல்வேறு கட்ட ஆய்வுக் குப்பிறகு திருத்தம் செய்யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 134-ல் இருந்து ஒரு பிரிவு பாகம் 135-ல் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல், பாகம் எண் 138-ல் இருந்து ஒரு பிரிவு பாகம் 133-ல் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ராணிப்பேட்டை, அரக்கோணம் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களுடன் மாறுதல் செய்யப்பட்ட வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பார்வைக்காக வைத்துள்ளனர்.

இது தொடர்பான ஆட்சேபணைகள் ஏதாவது இருந்தால் அது குறித்து எழுத்துப்பூர்வ கடிதத்துடன் 7 நாட் களுக்குள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x