Published : 12 Sep 2021 03:22 AM
Last Updated : 12 Sep 2021 03:22 AM

திருவண்ணாமலை அருகே : மகளுக்கு விஷம் கொடுத்து : தாயும் தற்கொலை :

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே குடும்ப தகராறில் மகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை அடுத்த சின்னகோளாப்பாடி கிராமத்தில் வசிப்பவர் ஜெயபிரகாஷ்(32). இவரது மனைவி சந்தியா(30). தம்பதி இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால், 2 பேருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், 7 வயது மகள் ஜெயக்கு பூச்சி கொல்லி மருந்தை கொடுத்துவிட்டு, சந்தியாவும் குடித்துள்ளார். இதில், அவர்கள் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணா மலை கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x