Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு : உற்சாகத்துடன் வந்த மாணவ, மாணவிகள்

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்படி, வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அடுத்த படம்: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசுப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார். கடைசிப் படம்: நாட்றாம்பள்ளியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு நடத்தி கரோனா விதிமுறைகளை மாணவிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/தி.மலை

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததால் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் நேற்று தொடங்கின. இதில், அதிகபட்சமாக 12-ம் வகுப்பு மாணவர்கள் 81.56 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர்.

தமிழகத்தில் கரோனா பெருந் தொற்று குறைய தொடங்கியதால், செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் நேற்று பள்ளிகள் மற்றும் கல் லூரிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களாக ‘ஆன்லைன்’ மூலம் பாடங்களை படித்து வந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிக்கு வந்தனர்.

வேலுார் மாவட்டத்தில் 287 பள்ளிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 231 பள்ளிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 135 பள்ளிகள் என மொத்தம் 653 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி வளாகம், வகுப் பறைகள் என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகள் முழுவதும் நேற்று முன்தினம் கிருமிநாசினி தெளிக் கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். பள்ளிக்கு நேற்று காலை வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிகளுக்கு வந்தனர். வகுப்பறையில் சமூக இடை வெளியுடன் மாணவர்கள் உட்கார வைக்கப்பட்டனர்.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பதால், 2 குழுக்களாக பிரித்து பாடத்திட்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு பாடங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை 9-ம் வகுப்பு மாணவர்கள் 66.48 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 78.87 சதவீதம் பேரும், 11-ம் வகுப்பு மாணவர்கள் 60.25 சதவீதம் பேரும், 12-ம் வகுப்பு மாணவர்கள் 81.56 சதவீதம் பேரும் பள்ளிக்கு நேற்று வந்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல் லூரிகள் நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "வேலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் வகுப்பறையில் சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

அப்போது, மாநகராட்சி ஆணையர் சங்கரன், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, நகர் நல அலுவலர் மணிவண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதேபோல, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அரசுப்பள்ளிகளில் நேற்று ஆய்வு செய்து, கரோனா விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆசிரியர்களிடம் அறி வுறுத்தினார்.

ராணிப்பேட்டை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வாலாஜா அரசுப் பள்ளியில் நேற்று ஆய்வு நடத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு அறிவுரை வழங்கி, கரோனா தடுப்பூசி குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.

கல்லூரிகள் திறப்பு

அதேபோல, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக் ஆகியவையும் நேற்று காலை திறக்கப்பட்டன. முதுநிலை 2-ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பொறியியல் இறுதியாண்டு மாண வர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கின.

மாணவ, மாணவிகள் அனை வரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பது குறித்து கல்லூரி நுழைவு வாயிலில் சோதனை செய்யப்பட்டது. தவிர மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறையில் சமூக இடை வெளி விட்டு மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். அதே போல, கல்லூரிக்கு வந்த பேராசிரி யர்களும் கரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா? அதற்கான சான்றிதழ் உள்ளதா? என்பது ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்களும், பேராசிரியர்களும், கல்லூரி ஊழி யர்களும் முகக்கவசம் அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x