Published : 01 Sep 2021 03:16 AM
Last Updated : 01 Sep 2021 03:16 AM
தமிழகத்தில் கிராம, மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நடந்தது.
சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்கள், 385 கிராம ஊராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துக்கு இருகட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சிலர் பதவி விலகியது, உறுப்பினர் மரணம் உள்ளிட்ட காரணங்களால் காலியான பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள், வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளிட்டவற்றுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் வீராணம், அதிகாரிப்பட்டி, தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் கோவிந்தம்பாளையம், சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் சேலத்தாம்பட்டி, வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் புத்தூர் அக்ரஹாரம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் தாராபுரம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளாறு, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் கரிக்காப்பட்டி, ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிக்கம்பட்டி, புளியம்பட்டி ஆகிய கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய பகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 23 கிராம ஊராட்சி வார்டுகள், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு உட்பட்ட பகுதிகள், மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு உட்பட்ட பகுதிகள் என மாவட்டத்தில் மொத்தம் 239 வார்டுகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஆண் வாக்காளர்கள் 65 ஆயிரத்து 206 பேர், பெண் வாக்காளர்கள் 62 ஆயிரத்து 161 பேர், திருநங்கை வாக்காளர்கள் 2 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 189 வாக்காளர்கள் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் 206 வாக்குச் சாவடிகள் அடங்கிய விவரங்கள் தொடர்புடைய கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றில் நேற்று வெளியிடப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT