Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM

தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் :

மதுரை: மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இதுவரை தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்ட (வண்டி எண் 06235) தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் இனி மாலை 5.15 மணிக்கு புறப்படும். இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியிலிருந்து மாலை 5.45 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து மாலை 6.15 மணி, சாத்தூரில் மாலை 6.35 மணி, விருதுநகரில் இரவு 7.00 மணி, திருமங்கலத்தில் இரவு 7.23 மணி, திருப்பரங்குன்றத்தில் இரவு 7.35 மணி, மதுரையில் இருந்து இரவு 8.05 மணிக்கும் புறப்படும். சோழவந்தானில் இருந்து இரவு 8.25 மணிக்கும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்

(வண்டி எண் 06192) நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து 10 நிமிடம் முன்னதாக புறப்படும்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த ரயில் மாலை 5.15 மணிக்கு பதிலாக மாலை 5.05 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கோவில்பட்டியில் இருந்து மாலை 6 மணிக்கும், விருதுநகரில் இருந்து மாலை 6.40 மணிக்கும், மதுரையில் இருந்து இரவு 7.55 மணிக்கும் புறப்படும். இந்நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x