Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM

பெற்றோர் வாங்கிய கடனுக்காக - 4 சிறுமிகளை வீட்டில் வைத்து பூட்டியவர் கைது :

திருவண்ணாமலை

ஆரணியில் பெற்றோர் வாங்கிய கடனுக்காக 4 சிறுமிகளை உள்ளே வைத்து வீட்டை பூட்டிய உறவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் பெரியார் நகரில் வசிப்பவர் கூலித் தொழிலாளி ரகு. இவர், தனது உறவினரான ஆரணி என்.எஸ்.கே. நகரில் வசிக்கும் கேஷ்டிராஜாவிடம் கடந்தாண்டு ரூ.2.80 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

அதில், ரூ.40 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.2.40 லட்சத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார்.

பணத்தை கேட்பதற்காக, ரகு வீட்டுக்கு கேஷ்டிராஜா நேற்று சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் ரகு மற்றும் அவரது மனைவி அஞ்சுகம் ஆகியோர் வெளியே சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கேஷ்டிராஜா, ரகு வீட்டுக்கு பூட்டு போட்டுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே ரகுவின் மகள்கள் ரித்விகா(17), சத்விகா(17), ரிஷிகா(15) மற்றும் உறவினர் மகள் யோகேஷ்வரி ஆகியோர் இருந் துள்ளனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வீட்டுக்கு திரும்பிய ரகு, தனது வீட்டுக்கு பூட்டு போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அவர், ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், கேஷ்டிராஜா பூட்டு போட்டது உறுதி யானது. பின்னர் அவரிடம் இருந்த சாவியை பெற்று வீட்டை திறந்து 4 சிறுமிகளை மீட்டனர்.

இதுகுறித்து ஆரணி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கேஷ்டிராஜாவை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x