Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM
திருச்சி- கரூர் சாலை விரிவாக்கத் துக்காக அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகள் மீண்டும் அமைக் கப்படாததால் பயணிகள் வெயில், மழையில் அவதிப்பட்டு வரு கின்றனர். அகற்றியதற்கு பதிலாக புதிதாக அமைக்க நிதி ஒதுக் குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருச்சி- கரூர் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்ற தால் குடமுருட்டி செக்போஸ்ட் முதல் ஜீயபுரம் வழியாக திண்டுக் கரை வரை சுமார் 11 கி.மீ தூரத்துக்கு ரூ.55 கோடி செலவில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக இச்சாலையின் இருபுறத்திலும் இருந்த நூற்றுக் கணக்கான மரங்கள் அகற்றப் பட்டதுடன், கம்பரசம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
நவீன பேருந்து நிழற்குடைகள்
இவைதவிர பயணிகளின் வசதிக்காக எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் தலா ரூ.6 லட்சம் மதிப்பில் திருச்சி- கரூர் வழித்தடத்தில் மான்சிங்பேட்டை, பழூர், அல்லூர் மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் துருபிடிக்காத இரும்பு (எஸ்.எஸ் ஸ்டீல்) கொண்டு நவீன வசதிகளுடன் அமைக் கப்பட்டிருந்த பயணிகள் நிழற் குடைகள் அகற்றப்பட்டன.மேலும் கரூர் - திருச்சி வழித்தடத்தில் கடியாக்குறிச்சி, அல்லூர் மேலத்தெரு, முருங்கைப் பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்த சிமென்ட் கட்டிடத்தால் ஆன பயணிகள் நிழற்குடைகளும் இடிக்கப்பட்டன. அதன்பின் சாலை விரிவாக்கப் பணிகள் ஏறக்குறைய முடிந்து, இவ்வழியாக வாகன போக்குவரத்து இயல்பாகிவிட்ட நிலையில் இதுவரை அங்கு மீண்டும் பயணிகள் நிழற்குடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
அதேபோல, இச்சாலையின் வழிநெடுகிலும் உள்ள கிராமங் களை அடையாளப்படுத்தும் வகையிலும், பிரிவு சாலைகள் செல்லக்கூடிய ஊர்களை சுட்டிக் காட்டும் வகையிலும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளும் விரிவாக்கப் பணி களின்போது அகற்றப்பட்டன. அவற்றையும் இதுவரை மீண்டும் வைக்கவில்லை. இதனால் வெளி யூரிலிருந்து வரக்கூடிய பயணிக ளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஆட்சியரிடம் முறையிட முடிவு
இதுகுறித்து சாலை பயனீட்டா ளர் நலக்குழு ஒருங்கிணைப் பாளரான அல்லூர் பெ.அய்யாரப் பன் கூறும்போது, ‘‘சாலை விரி வாக்கப் பணிகளுக்காக அகற் றப்பட்ட நிழற்குடைகளை மீண்டும் அமைக்க இதுவரை எந்த நடவ டிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.எம்எல்ஏ அல்லது எம்.பி.க் களிடம் நிதி பெற்றுத்தான் மீண்டும் வைக்க வேண்டுமெனில், ஒரே நேரத்தில் இத்தனை பேருந்து நிழற்குடைகளுக்கு அவர்களிடம் நிதி பெற முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. அதற்கு பல ஆண்டுகள்கூட ஆகலாம். அதுவரை வெயில், மழையில் பயணிகள் அவதிப்படும் சூழல் ஏற்படும். பொதுவாக தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின்போது, அந்த வழித் தடத்திலுள்ள ஒவ்வொரு கிராமத் துக்கும் அவர்களே பேருந்து நிழற்குடைகள் அமைத்து தருவர். அதுபோல இங்கும் மாநில நெடுஞ் சாலைத்துறையே அமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக் கும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளோம்’’ என்றார்.
நெடுஞ்சாலைத் துறையால் இயலாது
இதுகுறித்து மாநில நெடுஞ் சாலையின் திருச்சி கோட்டப் பொறியாளர் கேசவனிடம் கேட்ட போது, ‘‘விரிவாக்கப் பணிகளுக் காக அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகளுக்கு பதிலாக, புதிய நிழற்குடைகளை நெடுஞ் சாலைத்துறையால் அமைத்துத் தர இயலாது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தொகுதி மேம்பாட்டு நிதி ஆதாரங்கள் மூலமாக அவற்றை அமைத்துக் கொள்ளலாம். இந்த வழித்தடத்திலுள்ள கிராமங்களிலும், பிரிவு சாலை களிலும் வழிகாட்டும் அறிவிப்பு பலகைகளை விரைவில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
அகற்றிய பாகங்கள் எங்கே..?
தற்போது அவற்றை மீண்டும் கொண்டு வந்து பொருத் தினாலே, மிகக் குறைந்த செலவில் பழையபடி பேருந்து நிழற்குடைக்கான கட்டமைப்பு களை உருவாக்கிவிட முடியும். ஆனால் தற்போது அந்த இரும்பு பாகங்கள் எங்குள்ளது என தெரியவில்லை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT