Published : 18 Aug 2021 03:14 AM
Last Updated : 18 Aug 2021 03:14 AM
ஈமு நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து தெரியவந்தால் தகவல் அளிக்கலாம், என நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 2012-ம் ஆண்டு நாமக்கல் - சேலம் சாலையில் எஸ்ஆா்ஒய் என்ற ஈமு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தை ஜம்புகுமார், சந்தோஷ் ஆகிய இருவரும் நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து பணத்தை முதலீடாகப் பெற்று மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனா். இதுதொடா்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவா் வரவில்லை. இதனால் நீதிமன்றம் அவருக்கு வாரன்ட் பிறப்பித்துள்ளது. சந்தோஷ் இருக்கும் இடம், அவரது நண்பா்கள், உறவினா்கள் வீடுகளுக்கு வருவது தெரிய வந்தால் உடனடியாக நாமக்கல் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலக தொலைபேசி 04286-281372 எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT