Published : 16 Aug 2021 03:22 AM
Last Updated : 16 Aug 2021 03:22 AM
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆட்சியர் சு.சிவராசு தேசியக் கொடியேற்றிவைத்து மரி யாதை செலுத்தினார். தொடர்ந்து, காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர், சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் வகை யில் வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார்.
தொடர்ந்து, தேசிய ஊட்டச்சத்து குழும திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி மாநில அளவில் திருச்சி மாவட்டம் முதலிடம் பெற்றதைத் தொடர்ந்து, திட்டத் தைச் சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஏ.சுப்பிரமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் டி.புவனேஸ்வரி ஆகி யோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சி யர் வழங்கினார்.
விழாவில் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் என 323 பேருக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சி யர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் ஆ.அருண், மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன், டிஐஜி ஏ.ராதிகா, எஸ்.பி பா.மூர்த்தி, மாநகர துணை ஆணையர்கள் ஆர்.சக்திவேல் (சட்டம்- ஒழுங்கு), ஆர்.முத்தரசு (குற்றம்- போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போர் நினைவுச் சின்னத்தில்...
முன்னதாக, காந்தி மார்க்கெட் எதிரே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆட்சியர் சு.சிவராசு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் 10 பேரின் வீடுகளுக்கு அரசுத் துறை உயர் அலுவலர்கள் சென்று பொன்னாடை அணிவித்து நினை வுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
கரூரில்...
சுதந்திர தினத்தையொட்டி, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆட்சியர் த.பிரபு சங்கர் தேசியக் கொடி ஏற்றி, காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். எஸ்.பி. ப.சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் ஆகியோருடன் இணைந்து சமா தானப் புறாக்கள், மூவர்ண பலூன் களை ஆட்சியர் பறக்கவிட்டார்.சிறப்பாக பணியாற்றியமைக் காக கரூர் மாவட்ட மைய நூலக 3-ம் நிலை நூலகர் ஆ.சதீஸ்குமார் உட்பட சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், 152 பேருக்கு ரூ.1.26 கோடியில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ராமமூர்த்தி தேசிய கொடியை ஏற்றினார்.
கரூர் ரயில் நிலைய சந்திப்பில் உள்ள 100 அடி உயர கம்பத்தில் மேலாளர் ஆர்.ராஜராஜன் தேசியக் கொடியேற்றினார்.
கரூர் மாவட்ட முப்படை முன்னாள் வீரர்கள் நலச் சங்கம் சார்பில் காந்தி கிராமத்தில் சுபேதார் மோகன்தாஸ் தேசியக்கொடி யேற்றினார்.
பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வுபெற்ற அரசு கலைக் கல்லூரி மாணவி ஜெ.செல்ஷியா தேசியக் கொடியேற்றினார்.
புதுக்கோட்டையில்...
புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் கவிதா ராமு தேசியக் கொடியேற்றினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.சுகாதாரத் துறையில் 106 பேர், காவல் துறையில் 59 பேர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 343 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.75.60 லட்சத்தில் வாட கைக்கு விடுவதற்காக வாகனங் களுடன்கூடிய 2 தேங்காய் பறிக் கும் கருவியை அத்துறை அலுவ லர்களிடம் ஆட்சியர் ஒப்படைத் தார்.
எஸ்.பி நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூரில்...
சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ஆட்சியர் ப. வெங்கட பிரியா தேசிய கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு, சிறப்பாக பணியாற்றிய 223 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் களை வழங்கினார். எஸ்.பி ச.மணி முன்னிலை வகித்தார்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி களின் வீடுகளுக்கு வட்டாட் சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்று தியாகி களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எ.லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரியலூரில்...
அரியலூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 504 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி நேற்று வழங்கினார்.அரியலூர் மாவட்ட விளை யாட்டு அரங்கில் நேற்று நடை பெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 504 பேருக்கு ரூ.9.89 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 20 காவலர் கள், 262 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர், அடுத்த 5 ஆண்டுகளில் மாவட்ட வளர்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிகள் செயல்படுத்தப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதி கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த குறுந்தகட்டை ஆட்சியர் வெளியிட, ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். இதில், எஸ்.பி கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னூலாப்தீன், கோட்டாட்சியர் ஏழுமலை உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT