Published : 16 Aug 2021 03:22 AM
Last Updated : 16 Aug 2021 03:22 AM

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சுதந்திர தின விழா :

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந் தர் கா.பிச்சுமணி தேசியக் கொடி யேற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) மருத குட்டி, ஆட்சிமன்றக்குழு உறுப் பினர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி அரசு அருங் காட்சியகத்தில் மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தேசியக் கொடியேற்றினார். போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றுகளும் வழங்கப் பட்டது.

எஸ்டிபிஐ கட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மற்றும் பசுமை மேலப்பாளையம் சார்பில் சுதந்திர தின விழாவை முன் னிட்டு மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் முதல் ரயில்வே கேட் வரை 75 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்டிபிஐ மாவட்ட துணைத்தலைவர் சாகுல் அமீது உஸ்மானி தொடங்கிவைத்தார்.

திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி மண்டல அலுவல கத்தில் ஆணையாளர் கணேஷ்குமார் ஜானி தேசியக் கொடியேற்றினார். துணை ஆணையாளர் சுதர்ஷன்ராவ் பூஜாரி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் கல்லூரி செயலாளர் செல்வராஜ் கொடியேற்றினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் திருநெல்வேலி டவுன் கிளை சார்பில் துணைத் தலைவர் பொன்னையா தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. தமுமுக சார்பில் மேலப் பாளையத்தில் நடந்த விழாவில் மாவட்டத் தலைவர் ரசூல் மைதீன் தேசியக் கொடியேற்றினார்.

கல்லிடைக்குறிச்சி தியாகி கோமதி சங்கர தீட்சிதர் முதியோர் இல்லத்தில் வைத்து சேவாபாரதி மற்றும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மருத்துவர்.பத்மனாபன் தலைமை வகித்தார். பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி , சேவாபாரதி மாவட்ட அமைப்பாளர் வீரராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்காசி

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தேசியக் கொடியேற் றினார். தென்காசி மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் ராமராஜா தலைமையில் நெல்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் சிலை, வெண்ணிக் காலாடி, ஒண்டிவீரன் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் புளியங்குடியில் நடைபெற்ற விழாவுக்கு நகர தமுமுக தலைவர் செய்யது அலி பாதுஷா தலைமை வகித்தார். புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங் தேசியக் கொடியேற்றினார். கடையநல்லூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. நகர தலைவர் அன்னக்கிளி சாதிக், தென்காசி மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி கலந்துகொண்டனர். .

செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பாலாஜி தேசியக் கொடியேற்றினார். அரசு வழக்கறிஞர்பரணீந்தர், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டனர். செங்கோட்டை வாகைமரத் திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த விழாவில் எஸ்.எஸ்.பழனி எம்எல்ஏ கொடியேற்றினார்.

பள்ளிகளில் கொண்டாட்டம்

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பள்ளி செயலாளர் முகமது, நிறுவனர் பாத்திமா, தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் ஷமீமா பர்வின் கலந்துகொண்டனர்.

இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் நடந்த விழாவில் செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், பாரத் வித்யா மந்திர் முதல்வர் வனிதா பங்கேற்றனர்.

இலத்தூர் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் கிருஷ்ணகுமார் தேசியக்கொடி ஏற்றினார். வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரியில் தாளாளர் முருகேசன் தலைமையில் விழா நடைபெற்றது. தென்காசி எம்.கே.வி.கே பள்ளியில் தாளாளர் பாலமுருகன், கொடிக்குறிச்சி ராம் நல்லமணியாதவா கல்வி நிறுவனங்களில் சேர்மன் மணிமாறன், வல்லம் நேஷனல் பள்ளியில் தாளாளர் அப்துல்மஜித், செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வர் ராம்மோகன், . பண்பொழி ராயல் நர்சரி பள்ளியில் பள்ளி தாளாளர் ஹக்கிம் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x