Published : 09 Aug 2021 03:18 AM
Last Updated : 09 Aug 2021 03:18 AM

பெரம்பலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் - ஒரு வாரத்துக்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு :

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் சில பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக் கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்துள்ளது:

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பெரம் பலூர் மாவட்டத்தில் பெரம் பலூர் நகராட்சி, அரும்பாவூர் பேரூராட்சி மற்றும் லப்பைக் குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு மட்டும் ஆக.4 முதல் ஆக.10-ம் தேதிவரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தக் கட் டுப்பாடுகள், தற்போது ஆக.16-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பெரம்பலூர் சிவன் கோயில் முதல் வானொலி திடல் சந்திப்பு வரை, வானொலி திடல் முதல் பழைய பேருந்து நிலையம் வரை, பழைய பேருந்து நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை, பழைய பேருந்து நிலையம் மார்க்கெட் பகுதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, கடைவீதி, என்எஸ்பி சாலை, பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றி யுள்ள பகுதிகள்.

அரும்பாவூர் பேரூராட்சிக் குட்பட்ட தழுதாழை சாலை முதல் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகம் வரை, பாலக்கரை முதல் அ.மேட்டூர் வரை மற்றும் லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட மாட்டுப் பாலம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை உள்ள பகுதிகளில் அனைத்துக் கடைகளும் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டும் உரிய காற்றோட்ட வசதியுடன் நிலை யான கரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.

மருந்தகங்கள், பால், காய்கறிகள் போன்ற அத்தியா வசிய தேவைக்கான கடைகள் வழக்கமாக அனுமதிக்கப்பட்ட நேரம் வரை செயல்படலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x