Published : 08 Aug 2021 03:19 AM
Last Updated : 08 Aug 2021 03:19 AM
ஆசிரியர் பட்டய பயிற்சி தனித் தேர்வர்களுக்கான ‘ஆன்லைன்’ விண்ணப்பப் பதிவு வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது என ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 கட்டணம், மதிப்பெண் சான்றி தழுக்கு ரூ.100, சேவைக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக விண்ணப்பப் பதிவேற்றம் மேற்கண்ட நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும். தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு குறித்த விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இரண்டாம் ஆண்டு மாண வர்களுக்கு செப்டம்பர் 2-ம் தேதி இந்திய கல்வி முறை, செப்டம்பர் 6-ம் தேதி கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும்-2, செப்டம்பர் 8-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, உருது கற்பித்தல், செப்டம்பர் 13-ம் தேதி ஆங்கிலம் கற்பித்தல்-2, செப்டம்பர் 15-ம் தேதி கணிதம் கற்பித்தல்-2, செப்டம்பர் 17-ம் தேதி அறிவியல் கற்பித்தல்-2, செப்டம்பர் 21-ம் தேதி சமூக அறிவியல் கற்பித்தல்-2 தேர்வுகள் நடைபெறும்.
முதலாம் ஆண்டு மாணவர் களுக்கு செப்டம்பர் 3-ம் தேதி கற்கும் குழந்தை, செப்டம்பர் 7-ம் தேதி கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும்-1, செப்டம்பர் 9-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, உருது கற்பித்தல், செப்டம்பர் 14-ம் தேதி ஆங்கிலம் கற்பித்தல்-1, செப்டம்பர் 16-ம் தேதி கணிதம் கற்பித்தல்-1, செப்டம்பர் 20-ம் தேதி அறிவியல் கற்பித்தல்-1, செப்டம்பர் 22-ம் தேதி சமூக அறிவியல் கற்பித்தல்-1 ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT