Published : 06 Aug 2021 03:21 AM
Last Updated : 06 Aug 2021 03:21 AM
வாங்காத சரக்கு வாகனத்தை வாங்கியதாகக் கூறி தனியார் நிதி நிறுவனம் தவணைத் தொகை கேட்டு நெருக்கடி கொடுப்பதாக பாதிக்கப்பட்டோர் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் புகார் தெரிவித்தனர்.
காரைக்குடி மானகிரியில் மகேந்திரா வாகனங்களை விற்ப னை செய்யும் தனியார் ஏஜென்ஸி (அஷிஷ்டா) செயல்பட்டது. இதன் கிளைகள் சிவகங்கை, ராமநா தபுரம், பரமக்குடி, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட இடங்களில் இருந்தன.
கடந்த ஆண்டு இந்த ஏஜென் ஸியிடம் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் பலர் அணுகினர். அவர்களிடம் முதல் தவணையாக குறிப்பிட்ட தொகை யை அந்த ஏஜென்ஸி வாங்கியது. மேலும் மீதித் தொகைக்கு அந்த ஏஜென்ஸி மகேந்திரா பைனான்ஸ் மூலம் வாடிக்கையாளர்களை ஒப்பந்தம் செய்தது.
இதற்காக அந்த நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் வங்கிக் காசோலைகளைப் பெற்றது. ஆனால் குறித்த காலத்தில் ஏஜென்ஸி வாகனத்தை வாடிக் கையாளர்களுக்கு வழங்கவில் லை.
இது குறித்து கேட்ட வாடிக் கையாளர்களிடம் செலுத்திய முதல் தவணைத் தொகையில் குறிப்பிட்ட தொகையைப் பிடித்துக் கொண்டு பாதியை மட்டும் கொடுத்தது.
அதன் பிறகு சில மாதங்கள் கழித்து கார் வாங்காத வாடிக்கையாளர்களிடம் கார் வாங்கியதாகக் கூறி நிதி நிறுவ னத்தினர் தவணைத் தொகை செலுத்துமாறு நெருக்கடி கொடுத் தனர். வாடிக்கையாளர்கள் இது குறித்து ஏஜென்ஸியிடம் கேட்டபோது, முறையாகப் பதில் அளிக்கவில்லை. மேலும் அந்த ஏஜென்சி சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப் பட்டோர் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்தனர்.
இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் கூறியதாவது:
வாகனங்களை கொடுக்காமல் ஏஜென்ஸியும், நிதி நிறுவன ஊழியர்களும் வாகனத்தை விற் றதாக கணக்கு காட்டி பணத்தை மோசடி செய்துள்ளனர்.
தற்போது எங்களை தவணைத் தொகை செலுத்தச் சொல்லி நிதி நிறுவனம் நெருக்கடி கொடுக் கிறது. எங்கள் பெயரில் கடன் இருப்பதால் சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டு, எங்களால் வேறு எங்கும் கடன் வாங்க முடியாது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட் டங்களில் மட்டும் 15 பேரை ஏமாற்றியுள்ளனர் என்றனர்.
இது குறித்து மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT