Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி, ஓடாநிலையில் உள்ள அவரது சிலைக்கு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் மணிமண்டபம் உள்ளது. ஆடிப்பெருக்கு மற்றும் அவரது 216-வது நினைவு நாளையொட்டி, தமிழக அரசின் சார்பில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி, அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் சிவகுமார், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.,யுமான அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், பி. தங்கமணி, பி.சி.ராமசாமி, கே.வி.ராமலிங்கம், எம்எல்.ஏ.கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்எல்ஏக்கள் பாலகிருஷ்ணன், கிட்டுசாமி, தென்னரசு, சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.பி.க்கள் செல்லகுமார சின்னையன், சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி தலைமையில், மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம், பொதுச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, ஓ.பி.சி. மாநில துணைத்தலைவர் கலைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
ம.தி.மு.க. ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, பாமக ஜி.கே.மணி, தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் முருகன், ஆனந்த், அமமுக மாவட்டச் செயலாளர்கள் டி.தங்கராஜ், எஸ்.ஆர்.செல்வம், சிவசுப்பிரமணியம், தமாகா சார்பில் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். டி.சந்திரசேகர், துணைத்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோரும், இந்து முன்னணி சார்பில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையிலான நிர்வாகிகளும் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொமதேக எம்பி ஏ.கே.பி.சின்ராஜ், உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
பேரூர் ஆதீனம் மரியாதை
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார் ஆகியோர் தீரன் சின்னமலை வாழ்க்கை குறிப்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டதோடு, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் மரியாதை செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT