Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM

சேலத்தில் விளம்பரப் பலகை டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் :

சேலம்

இருசக்கர வாகனத்தை போலீஸார் தர மறுப்பதாகக் கூறி, சேலத்தில் விளம்பரப்பலகை டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அஸ்தம்பட்டி அருண் நகரைச் சேர்ந்தவர் சரவணன்(36). இவர் நேற்று கோரிமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கன்னங்குறிச்சி போலீஸார் அவரது வாகனத்தை நிறுத்தி, அவரிடம் வாகன ஆவணங்களை கேட்டுள்ளனர்.

அது உறவினர் வாகனம், ஆணவங்கள் உறவினரிடம் இருப்பதாக சரவணன் கூறியுள்ளார். ஆவணங்களை காண்பித்து விட்டு, வாகனத்தை எடுத்துக் கொள்ள போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள விளம்பரப்பலகை டவர் மீது ஏறிய சரவணன், போலீஸார் தனது இருசக்கர வாகனத்தை தர இழுத்தடித்து வருகின்றனர் எனக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து அங்கு சென்ற சேலம் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வேதரத்தினம், சரவணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்க வைத்தார். பின்னர் இருசக்கர வாகனத்தை அவரிடம் போலீஸார் வழங்கி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனக் கூறி அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x