Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 சதவீத அரசு ஊழியர்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வில்லை என ஆட்சியர் பா.முருகேஷ் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் கைகளை சுத்தம் செய்தல் ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். அப்போது, அவரது தலைமையில் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், கைகளை சுத்தம் செய்யும் முறை குறித்து மருத்துவக் குழுவினர் விளக்கினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, “அரசு அதிகாரிகள் மற்றும் ஊழி யர்கள்தான், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், அரசுப் பணியில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தி.மலை மாவட் டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளது. அரசுப் பணியில் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். 30 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள் ளுங்கள்.
2-வது அலையை விட 3-வது அலை தீவிரமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள் ளாதவர்கள் வசிக்கும் பகுதியில் பாதிப்பு அதிகரிக்கும் என்கிறார்கள். தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மக்களை காப்பாற்றும் பொறுப்பு, அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உள்ளது. 3-வது அலையின் தீவிரம் செப்டம்பரில் தெரியும் என்கிறார்கள். அனைவரும் முன் னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டம் என்ற இலக்கை அடைய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT