Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி யள்ளதால் இலவச கல்வி பெற மாணவர்களுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா அழைப்பு விடுத் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப் பத்தூர் மாவட்டம் குரும்பேரி, ஆதியூர் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த 3 தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாகவும், ஆலங்காயம் பகுதியில் இயங்கி வந்த ஆதி திராவிடர் நல உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, 2021-ம்கல்வியாண்டில் குரும்பேரி, ஆதியூர் மற்றும் நத்தம் ஆகிய பகுதியில் உள்ள நடுநிலை பள்ளிகளில் 6-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது.
அதேபோல, ஆலங்காயம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை யும் தொடங்கப்பட்டுள்ளது.
திறமை வாய்ந்த ஆசிரியர்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதி திராவிடர் நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அனுபவமிக்க ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி ஆலங்காயம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைபள்ளியில் திறன் மேம்பாட்டு வகுப்பறையுடன் கூடிய கற்றல், கற்பித்தல் வகுப்பு நடத்தப்படுகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு திறமை வாய்ந்த அனுபவம் உள்ள ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நூலக வசதி
உயர் தொழில் நுட்ப வசதியுடன் கூடிய நவீன கணினி ஆய்வகம் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் தேர்வுகள் இப்பள்ளியில் நடத்தப்படுகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு இலவச தங்கும் விடுதி வசதியும் உள்ளது. மாணவர்களுக்காக நூலக வசதியும் உள்ளது.ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை மற்றும் இலவசக் கல்வி மாணவர்களுக்கு வழங்கப் படுகிறது.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் சேர்ந்து படிக்கலாம்’’ என தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT