Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM
புவனகிரி அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரத்தில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி கூட்டத்திற்கு புவனகிரி வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஆத்மா திட்ட வட்டார தொழில் நுட்பமேலாளர் கல்பனா, உதவி வேளாண் அலுவலர் ரமேஷ், உதவி தொழில் நுட்பமேலாளர் வசுமதி, குமரேசன், ஊராட்சி மன்றத்தலைவர் இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடேசன் பேசுகையில், “செயற்கை உரங்களின் பயன்பாட்டினை குறைத்து அதிகளவில் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தும் போது தரமான விளைபொருட்கள் கிடைக்கிறது. மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுகிறது”என்றார்.
செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், அமைப்பாளர் முருகன் ஆகியோர் இயற்கை வேளாண் சாகுபடியில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் இயற்கை இடுபொருட்களான பஞ்சகவ்யம்,மூலிகை கரைசல், இயற்கை பூச்சிவிரட்டி, அமிர்த கரைசல், நீர்மோர் கரைசல் பற்றிய தொழில்நுட்ப உரையாற்றி செயல் விளக்கமும் அளித்தனர்.
இயற்கை இடுபொருட்களான பஞ்சகவ்யம், உயிர் உரங்கள், பூச்சி விரட்டிகளான எருக்கு, நொச்சி,வேம்பு, ஆடு தீண்டா பாளை, துளசி போன்ற இயற்கை மூலிகைகள் காட்சிக்கு வைக் கப்பட்டிருந்தன. விவசாய சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT