Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கவும், மகளிர் போலீஸார் அவர்களுக்கு உதவும் வகையிலும் ‘தோழி’ திட்டம் தொடக்க நிகழ்ச்சி, ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி ரவளிபிரியா தலைமை வகித்தார். டி.ஐ.ஜி. விஜயகுமாரி ‘தோழி’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
24 போலீஸாருக்கு இரு சக்கர வாகனம், ஒரு மடிக்கணினி வழங்கினார். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி.க்கள் லாவண்யா, சந்திரன், வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் போலீஸார் கிராமங்களில் குழந்தைகள், பெண்களைப் பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வர். பாதிக்கப்பட்டவர்கள் 1098 மற்றும் 181 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT