Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு - ரூ.50.83 லட்சம் நலத்திட்ட உதவிகள் :

திருப்பத்தூரில் அமைப்பு சாரா தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா. படம்: ந.சரவணன்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூடுதல் கூட்டரங்கில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து, 915 தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசும்போது, ‘‘தமிழ் நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் கடந்த 1994-ம் ஆண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரியம் மூலம் 53 வகையான தொழில்களில் ஈடுபட் டுள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பதிவு கட்டணம் ஏதும் இல்லாமல் இந்த வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி முதல் ‘ஆன்லைன்’ மூலம் பதிவு மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை இலவசமாக செய்து கொள்ளலாம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் இருந்து 1,200 விண்ணப் பங்கள் வரப்பெற்றன. இதில், 915 மனுக்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் இன்று (நேற்று) வழங்கப்படுகிறது.

மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு அதில் தகுதியுள்ளவர்களுக்கு விரைவில் நலத் திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப் பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x