Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM
பரங்கிப்பேட்டை, குமராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சேந்திரகிள்ளை பகுதியில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருண்மொழிதேவன் ஊராட் சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.47.29 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் அதற்கான குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.
பி.முட்லூர் பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.83.46 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து குமராட்சி ஊராட்சி ஒன்றியம் மடப்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ 3.39 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
சி.வக்காரமாரி ஊராட்சி யில் பசுமை வீடுகள் மற்றும்பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டவுள்ள இடங்களை பார்வையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க பயனாளிகள் மற்றும் அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார்.
தொடர்ந்து குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பிரதமர் வீடு வழங்கும் திட்டப் பணிகள், ஜல்ஜீவன் திட்டப் பணிகள், மகாத்மாகாந்தி தேசியஊரக வேலை உறுதி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார்.
கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT