Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM

போலி ஆவணம் தயாரித்து 1.85 ஏக்கர் நிலம் மோசடி :

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியுடவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராகவன். இவர், வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, ‘‘எனது தாயார் பேபியம்மாள் கடந்த சில மாதங் களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அவருக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி கிராமத்தில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி அகமதுபாட்சா என்பவர் போலி ஆவணம் தயாரித்து எனது தாயாருக்கு சொந்தமான நிலத்துக்கு பவர் பட்டா வாங்கி, அதை ஜூலை 23-ம் தேதி சுஜாதா என்பவருக்கு கிரையம் செய்துள்ளார். எனவே, போலி ஆவணம் தயாரித்து 1.85 ஏக்கர் நிலத்தை விற்று மோசடி செய்தவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நில மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x