Published : 23 Jul 2021 07:12 AM
Last Updated : 23 Jul 2021 07:12 AM

சேலம், ஈரோடு, தருமபுரி வழியாக இன்று முதல் கண்ணூர்- யஷ்வந்த்பூர் தினசரி சிறப்பு ரயில் :

சேலம்

சேலம், ஈரோடு, தருமபுரி வழியாக, கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூர் இடையே தினசரி சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

யஷ்வந்த்பூர்- கண்ணூர் தினசரி சிறப்பு ரயில் (எண். 07389), இன்று (23-ம் தேதி) முதல் தினமும் இரவு 8 மணிக்கு யஷ்வந்த்பூரில் புறப்பட்டு, ஓசூர், தருமபுரி வழியாக சேலத்துக்கு நள்ளிரவு 12.32 மணி, ஈரோட்டுக்கு நள்ளிரவு 1.35 மணி, திருப்பூருக்கு நள்ளிரவு 2.23 மணி, கோவைக்கு நள்ளிரவு 3.27 மணிக்கு வந்து, மறுநாள் காலை 9.45 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் (ரயில் எண்.07390), நாளை (24-ம் தேதி) முதல் கண்ணூரில் இருந்து தினமும் மாலை 6.05 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு இரவு 11.07 மணி, திருப்பூர் இரவு 11.55 மணி, ஈரோடு நள்ளிரவு 12.40 மணி, சேலம் நள்ளிரவு 1.37 மணிக்கு வந்து, தருமபுரி, ஓசூர் வழியாக மறுநாள் காலை 7.50 மணிக்கு யஷ்வந்த்பூரை சென்றடையும்.

இதேபோல், சேலம், ஈரோடு வழியாக யஷ்வந்த்பூர்- மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. யஷ்வந்த்பூர்- மங்களூரு (எண்.07391) சிறப்பு ரயில் வரும் 25-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் யஷ்வந்த்பூரில் இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு, சேலத்துக்கு மாலை 5.12 மணி, ஈரோட்டுக்கு மாலை 6.25 மணி, திருப்பூருக்கு மாலை 7.13 மணி, கோவைக்கு இரவு 8.12 மணிக்கு வந்து, மறுநாள் மாலை 4.05 மணிக்கு மங்களூரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், (ரயில் எண். 07392), 26-ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மங்களூருவில் இரவு 8.05 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு மாலை 3.52 மணி, திருப்பூர் மாலை 4.43 மணி, ஈரோட்டுக்கு மாலை 5.35 மணி, சேலத்துக்கு மாலை 6.32 மணிக்கு வந்து, மறுநாள் மதியம் 1 மணிக்கு யஷ்வந்த்பூரை சென்றடையும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x