Published : 23 Jul 2021 07:14 AM
Last Updated : 23 Jul 2021 07:14 AM
திருநெல்வேலி மாநகரிலுள்ள பிரதான நீர்வழித்தடமான நெல்லை கால்வாய் கழிவு களும், குப்பை களும் நிறைந்து காணப்படுவது இயற்கை ஆர்வலர்களையும், விவசாயிகளையும் வேதனையுற வைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாசனத்துக்கு தண்ணீர் பாய்ந்தோட உருவாக்கப்பட்ட பாளையங் கால்வாய், கோடகன்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் உள்ளிட்ட பல கால்வாய்களிலும் குப்பைகளும், கழிவுகளும் நிரம்பியிருக்கின்றன.
பல இடங்களில் மண் மேடிட்டும், ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்தும் காணப்படுகிறது. பாளையங்கால்வாயில் திருநெல்வேலி மாநகர பகுதிக்குள் பல்வேறு இடங்களில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதுபோல் கோடகன் கால்வாய் பல்வேறு இடங்களில் மண் மேடாகி, தூர்ந்து காணப்படுகிறது. திருநெல்வேலி கால்வாய் மற்றும் அதன் கிளை கால்வாய்களின் கரைகள் பல இடங்களில் உடைப்பெடுத்து கால்வாய்க்குள் மண் சரிந்து கிடக்கிறது.
திருநெல்வேலி டவுன் லாலா சத்திரமுக்கு பகுதியிலும், நயினார்குளத்தில் கால்வாய் சேரும் பகுதிகளிலும் பெருமளவில் குப்பைகளும், கழிவுகளும் நிரம்பியிருக்கின்றன. பாசனத்துக்கு பயன்பட வேண்டிய தண்ணீர் கழிவுநீராக மாறியிருப்பது அனைத்து தரப்பின ரையும் வேதனை அடைய வைத்திருக்கிறது.
வழக்கமாக கோடைக் காலத்தில் இக்கால்வாய்களை மராமத்து செய்து தயார்படுத்தி வைத்தால், ஜூன் மாதம் மழைக் காலத்தில் அணைகளில் இருந்து கார் பருவத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்போது கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே கடைமடை பகுதி விவசாயிகள் தண்ணீருக்காக தவம் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
கோடை காலங்களில் நீராதாரங் கள், கால்வாய்களை மராமத்து செய்ய வேண்டும் என்பதையே மறந்து விட்டனர்.
கோடையில் குளங்கள், கால்வாய்களை தூர்வாரி செப்பனி டுவதற்கு அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்தால் மே மாதத்தில் தூர்வாரும் பணிகளை கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கும் முன் முடிக்க முடியும்.
இதனால் அனைத்து பாசன குளங்களுக்கும், கடைமடை பகுதி களுக்கும் தண்ணீர் கிடைக்கும். திருநெல்வேலி மாநகரில் நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் ஆகிய முக்கிய நீர்வழித்தடங்கள் அனைத்தும் பாழ்பட்டும், கழிவுகள் கொட்டும் பகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இதனால் கடைமடை பகுதி குளங் களுக்கு தண்ணீர் சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கால்வாய்களை தூர்வாரி செப்பனிட வேண்டிய பொறுப்பு அரசுத்துறைகளுக்கு இருப்பதுபோல், அவற்றில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டாமல் இருக்க பொதுமக்களும், வியாபாரிகளும் முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT