Published : 23 Jul 2021 07:14 AM
Last Updated : 23 Jul 2021 07:14 AM
பாளையங்கோட்டை ஜவஹர் திடலிலும், எருமைக்கடா மைதானத்திலும் தற்காலிக கடைகள் அமைக்க தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்துமுன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் க. பிரம்ம நாயகம் உள்ளிட்டோர் அளித்த மனு:
பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் மேம்படுத்தப்படவுள்ளதால் அங்கிருக்கும் வியாபாரிகளுக்கு பாளையங்கோட்டை எருமைக்கடா மைதானம் மற்றும் ஜவஹர் திடலில் தற்காலிக கடைகள் அமைக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன.
பாளை மார்க்கெட் திடலில் தசரா காலத்தில் அம்மன்கோயில் சப்பரங்கள் வரிசையாக பொதுமக்கள் வழிபாட்டுக்கு நிறுத்தப்படும். எருமை வடிவில் வரும் அசுரனை அம்மன் சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் எருமைகடா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த இரு இடங்களிலும் தற்காலிக கடைகள் அமைத்தால் தசரா விழாவின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறாமல் தடைபடும். எனவே இந்த இரு இடங்களிலும் தற்காலிக கடைகள் அமைப்பதை தவிர்த்து வேறுபகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT