Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM
சிவகங்கை மாவட்டம், மானா மதுரை, சிங்கம்புணரி அருகே வசிக்கும் குஜராத்தைச் சேர்ந்த 500 நாடோடிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி சாதிச்சான்று வழங்கினார்.
மானாமதுரை அருகே மாரி யம்மன் நகர், கங்கை அம்மன் நகர், கலைக்கூத்து நகர் மற்றும் சிங்கம்புணரி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட நாடோடிகள் வசிக்கின்றனர்.
இவர்கள் கயிறு மீது நடந்து வித்தை காட்டுதல், தெருக்கூத்து உள்ளிட்ட கலைத் தொழில்களை செய்து வருகின்றனர். அவர்கள் நாடோடிகள் என்பதால் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள், எங்கிருந்து வந்தவர்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
இதனால் அவர்கள் 20 ஆண்டு களாகக் கோரிக்கை விடுத்தும் சாதிச்சான்றுகளை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் மறுத்து வந்தனர். இந்நிலையில் தங்களுக்கு சாதிச்சான்று தர வேண்டுமென மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சி யர் தலைமையிலான குழு விசா ரணை நடத்தியது.
விசாரணையில் அவர்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து நாடோடிகளாக வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களின் மொழி, பழக்கவழக்கங்களின் அடிப்படையில் தொம்பரா சாதி யைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று சிவ கங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நாடோடிகள் 500 பேருக்கும் தொம்பரா சாதிச் சான்றை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி வழங்கினார். அதோடு, முதல் கட்டமாக மானா மதுரை புதுக்குளம் பகுதியில் 11 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீதம் இலவச வீட்டுமனைப் பட்டாவையும் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சவுந்தர் ராஜன், வட்டாட்சியர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT