Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

நெல்லையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு :

திருநெல்வேலி/நாகர்கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மாவட்டத்தில் கரோனா 2-ம் அலை உச்சத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது. இம்மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை 50-க்கும் கீழாக குறைந்திருந்தது. கடந்த 17-ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 7 என்ற ஒற்றை இலக்கத்தை அடைந்தது. இதுபோல கடந்த 2 நாட்களுக்குமுன் எண்ணிக்கை 6 என்று இருந்தது.

ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக இருந்த நிலையில், நேற்று 32 ஆக உயர்ந்துள்ளது. இதில் திருநெல்வேலி மாநகர் பகுதியில் மட்டும் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவில் பாதிப்பு விவரம்:வள்ளியூர்- 10, ராதாபுரம்- 5, சேரன்மகாதேவி- 4, க ளக்காடு, நாங்குநேரி- தலா 2. கடந்த 2 நாட்களுக்குமுன் வள்ளியூர் வட்டாரத்தில் பாதிப்பு 2 ஆக இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் 13 பேருக்கும், நேற்று 10 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 3.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 10,500, தென்காசி மாவட்டத்துக்கு 8,000 கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வரவுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிகள் இன்னும் 3 நாட்களில் வரவுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடுவதற்காக 2 மையங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக போடப்படவில்லை. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடு வதற்கான கூட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் இங்கு செயல்பட்ட ஒரு மையம் தற்காலி கமாக மூடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. திருமண நிகழ்வில் 50 பேர் வரை கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இறப்பு நிகழ்ச்சியில் 20 பேருக்குள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என, ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x