Published : 22 Jul 2021 03:15 AM
Last Updated : 22 Jul 2021 03:15 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ் லாமியர்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகையில் நேற்று ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண் டாடப்பட்டது. கரோனா தொற்று காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இஸ்லாமியர்கள் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகையை நேற்று கொண் டாடி மகிழ்ந்தனர்.

வேலூர் கஸ்பா, ஆர்.என் பாளையம், சின்ன அல்லாபுரம், தொரப்பாடி, சத்துவாச்சாரி, காட்பாடி எம்ஜிஆர் நகர், சைதாப்பேட்டை, மக்கான், ஆற்காடு சாலை, முள்ளிப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் நேற்று காலை 6 மணி முதல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், கீழ்விஷாரம், வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், உமராபாத், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள பெரிய மசூதிகளில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. வசதியில்லாத ஏழை இஸ்லாமியர்கள் மற்றும் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த இஸ்லாமியர் களுக்கு, வசதி படைத்த இஸ்லா மியர்கள் இறைச்சி வகைகளை வழங்கி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள 15 மசூதி களில் ஊரடங்கு விதிகளுடன் நேற்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் சிறப்பு தொழுகை நடத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மசூதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்ற தொழுகையில் முகக்கவசம் அணிந்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள் வீடுகளில் ஆடுகளை பலியிட்டு குர்பானி கொடுத்தனர்.

அதேபோல், சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள பெரிய பள்ளிவாசல், சிறிய பள்ளிவாசல், ஈத்கா மைதானம் உட்பட 5 இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

பின்னர், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி கொடுத்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேலூர் கோட்டையில் பாதுகாப்பு

பக்ரீத் பண்டிகையையொட்டி வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் சிலர் சிறப்பு தொழுகை நடத்த போவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர்.

மேலும், காந்தி சிலையின் அருகே கோட்டைக்கு செல்லும் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைத்தனர்.அதிகாலை 5 மணி முதல் 15-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கோட்டையின் நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோட்டைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அனைவரும் சோதனைக்கு பின்னரே கோட்டையின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x