Published : 21 Jul 2021 03:17 AM
Last Updated : 21 Jul 2021 03:17 AM

ரயில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை :

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கரோனா தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொது போக்குவரத்து தொடங்கியுள்ளதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஆம்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை நேற்று மேற்கொண்டனர். ரயில் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்பணிகள் நடைபெற்றன. ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x