Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM
சேலம் அருகே வனப்பகுதியில் மான் மற்றும் உடும்பை வேட்டையாடியவரை ஒன்பது மாதத்துக்கு பின்னர் வனத்துறையினர் கைது செய்தனர். ஓமலூர் அருகே உடம்பை வேட்டையாடியவரை வனத்துறை ஊழியரின் பிடியில் இருந்து மீட்டுச் சென்ற 23 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் அடுத்த சேசன்சாவடி வனப்பிரிவு கோதுமலை தெற்கு காப்புக்காட்டு பகுதியில் கடந்தாண்டு அக்டோபர் 9-ம் தேதி வாழப்பாடி வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, அங்கிருந்த இருவர் தப்பி ஓடினர். வனத்துறையினர் அவர்களில் ஒருவரை பிடித்தபோது, அவர்கள் இரண்டு உடும்பு, ஒரு சருகு மானை வேட்டையாடியது தெரிந்தது.
விசாரணையில், பிடிபட்டவர் சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த தனபால் (23) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய குமார் (35) என்பவரை 9 மாதத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
23 பேர் மீது வழக்கு
சின்னவெள்ளாளப்பட்டி கரடு பகுதியில் சென்றபோது, கரியநாயக்கரின் மகன் பழனிவேல், உறவினர்கள் பாபு உள்ளிட்ட கும்பல் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, கரியநாயக்கரை மீட்டு அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில், ஓமலூர் போலீஸார் கரியநாயக்கர் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மேலும், வனத்துறையினர் உடும்பு வேட்டையாடிய கரியநாயக்கர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT