Published : 18 Jul 2021 03:16 AM
Last Updated : 18 Jul 2021 03:16 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 உழவர் சந்தைகளும் 19-ம் தேதி (நாளை) முதல் செயல்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகே மற்றும் தாமரை நகர், செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் கீழ்பென்னாத்தூர் என மாவட்டத்தில் உள்ள 8 உழவர் சந்தைகள் 19-ம் தேதி (நாளை) முதல் செயல்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT