Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM
நிலுவைச் சம்பளம் வழங்கக் கோரி, சேலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை செய்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2,500 பேருக்கு கடந்த 2 மாத சம்பளம் வழங்கவில்லை. இதனால், நாங்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். மேலும், கடந்த இரு ஆண்டாக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை எங்களது கணக்கில் செலுத்தவில்லை.
எனவே, மாதந்தோறும் 1-ம் தேதி கணினி ரசீதுடன் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.800 சீருடைக் கூலியை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையில், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 400 பணியாளர்களுக்கு மே மாத நிலுவைச் சம்பளத் தொகை ரூ.7 கோடியே 68 லட்சத்து 69 ஆயிரத்து 7-ஐ பணியாளர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைக்க மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT