Published : 12 Jul 2021 03:13 AM
Last Updated : 12 Jul 2021 03:13 AM
கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தன்னார்வல அமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் முன்களபணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.
கரோனா தொற்று இரண்டாம் அலையில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் நலன்கருதி தூய்மை பணிகள் மற்றும் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு பணிகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 500 பயனாளிகளுக்கு அரிசி
உள்ளிட்ட மளிகை தொகுப் புகளை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐய் யப்பன் முன்னிலையில் நேற்று வழங்கினார். அரசு அலுவலர்கள், முக்கிய பிர முகர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT