Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் தொண்டமாந்துறை, அரும்பாவூர், பூலாம்பாடி, கைகளத்தூர், பண்டகப்பாடி, திம்மூர், துங்கபுரம், காடூர், அகரம்சீகூர், ஓமலூர், நன்னை, எழுமூர், கீழப்புலியூர் என மொத்தம் 17 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 10,184 விவசாயிகளிடமிருந்து 32,206.44 டன் சன்ன ரக நெல், 1,003 டன் பொது ரக நெல் என மொத்தம் 33,209.44 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சன்ன ரக நெல் மூட்டைக்கு ரூ.1,958-ம், பொது ரக நெல் மூட்டைக்கு ரூ.1,918-ம் என விலை நிர்ணயம் செய்து, ரூ.49.57 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன்கருதி தொண்டமாந்துறை, அரும்பாவூர், பூலாம்பாடி, அன்னமங்கலம், பாண்டகப்பாடி, கீழப்புலியூர் ஆகிய 6 கொள்முதல் நிலையங் கள் தொடர்ந்து செயல்படவும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை விரைந்து வழங்கவும் சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT