Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடிகால் அடைப்பு, வெள்ள நீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு அதிகாரிகளை அலைபேசியில் அழைத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளநீர் வெளியேற்றுதல், வடிகால் அடைப்பு சரி செய்தல், கழிவு நீர் அகற்றுதல், குடிநீர் குழாயில் ஏற்படும் கசிவை சரி செய்தல், சாலை பராமரிப்பு, தெரு விளக்குகள் சரிசெய்தல், குப்பைகள் அகற்றுதல், சுகாதார வளாகங்கள் சுத்தம் செய்தல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவம் சார்ந்த குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்வது தொடர்பாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களை அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
சூரமங்கலம் மண்டல கட்டுப்பாட்டு அறையை 0427 2387514 என்ற எண்ணிலும், உதவி ஆணையர் ராம்மோகன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோரை 94429 26695, 84899 33322 என்ற எண்ணிலும், அஸ்தம்பட்டி மண்டலம் கட்டுப்பாட்டு அறை 0427 2310095, உதவி ஆணையர் சரவணன். உதவி செயற்பொறியாளர் சிபிசக்ரவர்த்தி ஆகியோரை 70108 60938, 84899 33317 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், அம்மாப்பேட்டை மண்டல கட்டுப்பாட்டு அறை எண் 0427 2263161, உதவி ஆணையர் சண்முகவடிவேல், உதவி செயற்பொறியார் செந்தில்குமார் ஆகியோரை 94432 70197, 90477 63050 என்ற எண்ணிலும், கொண்டலாம்பட்டி மண்டல கட்டுப்பாட்டு அறையை 0427 2216616, உதவி ஆணையர் ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரை 94866 92970, 84899 33399 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் மாநகராட்சி தொடர்பான முக்கிய பிரச்சினைகளை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் 73973 89315, மாநகர பொறியாளர் அ.அசோகன் 94422 14141, மாநகர நல அலுவலர் கே.பார்த்திபன் 84138 20950 ஆகியோரின் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT