Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM
காலத்தின் தேவை, சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதால் திருச்சியை 2-ம் தலைநகராக் குவதற்கான முயற்சிகள் தொடரும் என எம்.பி சு.திருநாவுக்கரசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
திருச்சி விமானநிலைய மேம்பாட்டு ஆலோசனைக் குழுக் கூட்டம் விமானநிலைய பழைய முனையத்தில் நேற்று நடைபெற்றது. குழுத் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான சு.திருநாவுக்கரசர் தலைமை வகித் தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
திருச்சி விமானநிலைய விரி வாக்கத்துக்கு தேவையான சுமார் 700 ஏக்கர் நிலத்தைப் பெற ராணுவம் மற்றும் பொதுமக் களிடம் பேச்சுவார்த்தை நடத் தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 46 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோருடன் கூட்டம் நடத்தி, இப்பணிகள் விரைவுபடுத்தப்படும். ஜங்ஷன் மேம்பாலத்துக்குத் தேவையான ராணுவ நிலத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவுக் கடிதம் ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும்.
திருச்சியை இரண்டாம் தலை நகரமாக்க முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சில மாவட் டங்களைப் பிரித்து சிலர் கொங்கு நாடு கேட்பதாக கூறப்படுகிறது. அதற்கு வாய்ப்பில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு நான் முயற்சிக்கவில்லை. கட்சியின் தலைமை, அப்பதவியை எனக்கு கொடுத்தால் திறம்பட செயல்படுவேன். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றார்.
திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருச்சியை 2-ம் தலைநகரமாக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எனது கன்னிப்பேச்சில் கோரிக்கை விடுத்தேன். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்து வருவதாக மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. காலத் தின் தேவை, போதிய உள்கட் டமைப்பு, போக்குவரத்து, நீர் வசதி உள்ளிட்டவை அதிகமாக இருப்பதால் திருச்சியை 2-ம் தலைநகராக்குவதற்கான முயற்சி களை தொடர்ந்து மேற்கொள் வோம்’’ என்றார்.
இக்கூட்டத்தில் விமானநிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ், மாநகர காவல் துணை ஆணையர் சக்தி வேல், குழு உறுப்பினர்கள் டாக்டர் அலீம், ரெக்ஸ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT