Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM
திருச்சி/ அரியலூர்/புதுக்கோட்டை/ பெரம்பலூர்
திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் ரூ.8 கோடி மதிப்பிலான 470 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில் நேற்று திருச்சி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான கிளாஸ்டன் பிளசட் தாகூர் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
இதன்படி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 3, மணப் பாறை, துறையூர், லால்குடி, முசிறி, ரங்கத்தில் தலா 1 என 8 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
இதில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வசூல் வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள் என 1,433 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ரூ.8.12 கோடி பணப்பலன்களை உடைய 470 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே.விவேகானந்தன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.மகாலட்சுமி தொடங்கி வைத்தார். விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்பட்ட 3,531 வழக்கு களில் 1,050 வழக்குகளுக்கு ரூ.44,05,900 மதிப்பில் தீர்வு காணப் பட்டது. இதற்கான ஏற் பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஆர்.கோகுல் முருகன் செய்திருந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்ற விசாரணையைமாவட்ட முதன்மை நீதிபதி எ.அப்துல்காதர் தொடங்கி வைத்தார். மாவட்ட கூடுதல் நீதிபதி ஆர்.குருமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி என்.சாந்தி, சார்பு நீதிபதி பி.ராஜா, குற்ற வியல் நீதிபதி எம்.அறிவு உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 128 வழக்குகளில் ரூ.1.83 கோடிக்கு தீர்வு காணப் பட்டது.
பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட தலைமை நீதிபதியுமான சுபாதேவி தலைமை வகித்தார்.
நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் (பொ) கிரி, எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மூர்த்தி உள்ளிட்டோர் வழக்குகளை விசாரித்தனர். இதில் 162 வழக்குகளில் ரூ.1,76,03,467 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT