Published : 10 Jul 2021 03:14 AM
Last Updated : 10 Jul 2021 03:14 AM

வங்கி கடனுக்கான தவணைத்தொகை செலுத்த காலஅவகாசம் வேண்டும் : சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை

வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணைத்தொகை செலுத்த அவகாசம் கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள்.

ஈரோடு

வங்கிகள், நிதி நிறுவனங்களில் தொழில்சார்ந்து பெற்றுள்ள கடன் தொகைக்கு, டிசம்பர் மாதம் வரை மாதாந்திர தவணைத்தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், என சாலைப்போக்குவரத்துத் தொழிலாளர்கள் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனு விவரம்:

சாலைப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள மினி ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகனம், கால் டாக்ஸி, பயணிகள் போக்குவரத்து மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள், லாரி, பேருந்து ஓட்டுநர்கள், ஒர்க் ஷாப் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், உதிரிப்பாக விற்பனையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்துநர்கள் உள்ளிட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் ஈரோட்டில் உள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தளர்வுகள் அறிவிக் கப்பட்டாலும், வாகன இயக்கம் என்பது இன்னமும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், இத்தொழிலாளர்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் தொழில்சார்ந்து பெற்றுள்ள கடன் தொகைக்கு தவணைத்தொகை செலுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, டிசம்பர் மாதம் வரை மாதாந்திரத் தவணை தொகை செலுத்துவதை ஒத்திவைக்க, ரிசர்வ் வங்கி மற்றும் அரசிடம் வலியுறுத்த வேண்டும். பொது போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்று பெற டிசம்பர் 31-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x