Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM

சேலம், ஈரோடு வழியாக - கோவை-திருப்பதி, மதுரை-சண்டிகர் சிறப்பு ரயில்கள் இயக்கம் :

சேலம்

கோவை- திருப்பதி சிறப்பு ரயில் (எண்.06194) 9-ம் தேதி காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, ஈரோட்டுக்கு 7.25 மணிக்கும், சேலத்துக்கு காலை 8.20 மணிக்கு வந்தடையும். திருப்பதிக்கு மதியம் 1.20 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 10-ம் தேதி (ரயில் எண்.06193) திருப்பதியில் மதியம் 2.55 மணிக்குப் புறப்பட்டு, சேலத்துக்கு மாலை 7.37 மணிக்கும், ஈரோட்டுக்கு இரவு 8.37 மணிக்கும், கோவைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் வாரத்தில் வியாழன், சனி, திங்கள், புதன் கிழமைகளில் இயக்கப்படும்.

இதேபோல, சேலம், ஈரோடு வழியாக மதுரை-சண்டிகர் வாரம் இருமுறை சிறப்பு சூப்பர் பாஸ்ட் ரயில் வாரத்தில் ஞாயிறு, புதன்கிழமைதோறும் இயக்கப்படும் மதுரை-சண்டிகர் சிறப்பு ரயில் (எண்.02687), 11-ம் தேதி மதுரையில் இரவு 11.35 மணிக்குப் புறப்பட்டு, ஈரோட்டுக்கு 2.55 மணிக்கும், சேலத்துக்கு அதிகாலை 4.02 மணிக்கும் வந்தடையும். 4-வது நாள் அதிகாலை 3.50 மணிக்கு சண்டிகரை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் சண்டிகர்- மதுரை சிறப்பு ரயில் (எண்.02688), 16-ம் தேதி சண்டிகரில் காலை 8.05 மணிக்குப் புறப்பட்டு, 3-வது நாள் சேலத்துக்கு காலை 8.47 மணி, ஈரோட்டுக்கு 10 மணிக்கும், கரூருக்கு 11.13 மணிக்கும், மதுரைக்கு மதியம் 1.55 மணிக்கு வந்தடையும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x