Published : 04 Jul 2021 03:14 AM
Last Updated : 04 Jul 2021 03:14 AM
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் எல்.அபிஷேகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் உரங்களை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். விழாவில், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் 100 சத வீத மானியத்தில் ரசாயன உரங் களை விவசாயிகளுக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.
தமிழக முதல்வர் அறிவித்த குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் 10,500 ஏக்கரில் ரூ.1.51 கோடி மதிப் பீட்டில் ரசாயன உரங்கள், விதைநெல் மற்றும் பசுந்தாள் உர விதைகள் வழங்கப்படு கின்றன.
இத்திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.2,185 மதிப்புள்ள 90 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஒரு விவ சாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்க ருக்கு மட்டும் உர மானியம் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ அ.சவுந்தரபாண்டியன், கோட் டாட்சியர் வைத்தியநாதன், ஒன்றியக் குழுத் தலைவர் டி.ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT