Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM
தேனி அல்லிநகரம் வெங்கலா கோயில் தெருவைச் சேர்ந்த விஜயன் மகள் கவிதா (32). இவர் கடந்த மாதம் 21-ம் தேதி தேனி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அதில் செல்வக்குமார் என்ற மதுரை செல்வா (45). யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது வீடியோ, புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆய்வாளர் வெங்கட்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மதுரை செல்வாவை தேடி வந்தனர். இந்நிலையில் கோயம்புத்தூர் கிராஸ்கட்ரோடு 7-வது தெருவில் உள்ள தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த செல்வாவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT