Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM
பவானிசாகர் அணையில் நேற்று முன்தினம் காலை முதல் நீர்வரத்து விநாடிக்கு 200 கனஅடிக்கு குறைவாக இருந்தது. பகல் 12 மணி அளவில் நீர்வரத்து 128 கனஅடியாக இருந்த நிலையில், மழைப்பொழிவு காரணமாக இரவு 9 மணிக்கு விநாடிக்கு 2458 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று காலை முதல் சராசரியாக அணைக்கு 500 கனஅடி வீதம் நீர் வரத்து நீடித்தது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.24 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 23.758 டிஎம்சியாகவும் இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 800 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 200 கனஅடி என பவானி ஆற்றில் 1000 கனஅடி நீர் அணையில் இருந்து திறக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT