Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசியை உத்திரவாதப்படுத்த வேண்டும். கரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.7,500, 10 கிலோ உணவு தானியங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பீமாராவ், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகி சங்கரபாண்டியன் பங்கேற்றனர்.

இதுபோல ஏர்வாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி. பெரும்படையார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் பூலுடையார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாங்குநேரி தொகுதி செயலாளர் ஈரவளவன் முன்னிலை வகித்தனர்.

தென்காசி

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் அயுப்கான் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் டேனி அருள்சிங், சிபிஎம் (எம்எல்) மாவட்ட குழு உறுப்பினர் அய்யப்பன், பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலாளர் தங்கபாண்டியன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, வேல்முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல, சிவகிரி, திருவேங்கடம், ஆலங்குளத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரச் செயலாளர் டி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ரசல், பேச்சிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அழகுமுத்துபாண்டியன், மாநகர செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலாளர் அகமது இக்பால், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் சிவராமன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2-ம் நாளாக இன்று (ஜூலை 29) கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுபோல் வரும் 28-ம் தேதி தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரத்திலும், 29-ம் தேதி கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளத்திலும், 30-ம் தேதி ஏரல் மற்றும் திருச்செந்தூரிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x