Published : 28 Jun 2021 03:14 AM
Last Updated : 28 Jun 2021 03:14 AM

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்.

திருப்பத்தூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கம் சார்பில் திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முல்லை தலைமை வகித்தார். சிபிஐ மாவட்டச்செயலாளர் சாமிக்கண்ணு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில், தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து செட்டேரி அணைக்கு உடனடியாக இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளுக்காக எடுத்துக்கொண்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் முழக்கம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x