Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தமிழக - கர்நாடக எல்லையில் தாளவாடி உள்ளது. இப்பகுதியில் கரோனா பரவலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் அச்சப்படும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த விடியல் இளைஞர் மன்றத்தினர், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விடியல் இளைஞர் மன்ற தலைவர் பிரபு மற்றும் முன்னாள் தலைவர் மணி ஆகியோர் கூறியதாவது:
தாளவாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் கரோனா பரவலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அச்சம் காரணமாக உறவினர்கள் முன்வராத நிலை உள்ளது.
இவ்வாறு இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு உதவும் வகையில், உடல்களை கவச உடையணிந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எடுத்துச் சென்று,அவரவர் மத, சாதி சம்பிரதாயங் களுக்கு ஏற்ப இறுதி அஞ்சலி செலுத்தி உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். இதுவரை 15-க்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்துள்ளோம். தொடர்ந்து இந்த சேவையைத் தொடரவுள்ளோம்,என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT