Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM
நடப்பு கல்வியாண்டில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வில் (என்.எம்.எம்.எஸ்) விருதுநகர் மாவட் டத்தில் 313 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்) நடப்புக் கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகைக்காக இத்தேர்வு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நடத்தப்பட்டது.
இத்தேர்வில் பங்கேற்று வெற்றிபெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக மத்திய அரசால் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் 37 மையங் களில், விண்ணப்பித்திருந்த 4,277 மாணவ, மாணவிகளில் 4,067 பேர் பங் கேற்று தேர்வு எழுதினர்.
இவர்களில் 313 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT